வகுப்பறைத் தூக்கம்
August 11, 2012
ஆறடிக் கட்டிலிருந்தும் அரைநொடித் தூக்கமில்லை
ஆழ்ந்த தூக்கம்தேடி வகுப்பறை சென்றேன்!
பஞ்சமில்லாத் தாலாட்டுக்கள் இடையே
கண்சிமிட்டும் தூக்கம் கொண்டேன்!
குறட்டைச் சத்தம் மட்டும் குறைச்சல் அங்கே,
பாட வேலைகள் மாறமாற
பகல்கனவு மட்டும் குறைந்தபாடில்லை.,
சிறுகதை ஒன்றைக் கனவில் இயக்க
கதாப்பாத்திரமாய் என்பெயர் ஒலிக்க, அருகில் இருந்த
தோழன் ஒருவன் என்தோளைத் தட்டினான்..
கண் விழித்த போது அங்கிருந்த
கண்களெல்லாம் என்னை நோக்க
அதட்டல் குரலில் ஆசான் வார்த்தைகள்..
என்ன தூக்கம் இந்த நேரம்…??
சொல்வதறியாது விழி பிதுங்கி நின்றிருந்த என்னிடம்
என்நிலை தெரியாமல் அவரே கேட்டார்!
இரவு முழுதும் படித்தாயா என்று?
தலை மட்டும் ஆடியது தூக்கக் கலக்கத்தில்!